Sunday, June 3, 2012

முபாரக்குக்கு ஆயுள்

எகிப்தில் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களில் 850 பேரை ராணுவத்தை ஏவிவிட்டு கொலை செய்த வழக்கில் அந்நாட்டு முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முபாரக் அரசில் உள்துறை அமைச்சராக இருந்த ஹபீப் அல்-அட்லிக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் போலீஸ் அதிகாரிகள் 6 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.முபாரக்கின் மகன்கள் ஆலா, காமல் ஆகியோர் மீதான ஊழல் வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எகிப்தில் சுமார் 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த முபாரக், கடந்த ஆண்டு ஏற்பட்ட மக்கள் புரட்சியில் ஆட்சியை இழந்தார்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP