பயிற்றுநர் பணி
தேனி மாவட்ட மகளிர் திட்டம் மூலம் வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பயிற்சி அளிப்பதற்கான முதன்மை பயிற்றுநர் பணிக்கு தகுதியுள்ளவர்கள் மே 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் எஸ்.மோகன்ராஜ் தெரிவித்துள்ளார்.இந்தப் பணிக்கு பிளஸ் 2, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மகளிர் திட்டப் பணிகளில் 5 முதல் 8 ஆண்டுகள் வரை களப்பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.சிறந்த தொண்டு நிறுவனங்களின் பயிற்சியாளர்கள், அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பயிற்சியில் தனித் திறமை பெற்ற முன்னாள் மாவட்ட முதன்மை பயிற்றுநர், முன்னாள் புதுவாழ்வு திட்ட பணியாளர்கள் ஆகியோர் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளவர்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 4-வது தளம், அறை எண்:71-ல் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் திட்ட அலுவலரிடம் உரிய சான்றிதழ்களுடன் நேரில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.