சென்னை: டெய்ம்லர் ஆலை
சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் பக்கம் உள்ள ஒரகடத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த டெய்ம்லர் குழுமம் பஸ், லாரிகள் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைத்துள்ளது. ரூ.4 ஆயிரம் கோடி செலவில் டெய்ம்லர் இந்தியா என்ற பெயரில் இந்தத் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், 'வாகனத்துறையில் ஆசியாவின் தலைநகராக சென்னை உருவெடுத்து வருகிறது. வாகன உதிரி பாக உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் சென்னை முன்னிலை வகிக்கிறது. உதிரி பாகங்கள் தயாரிக்கும் முதல் 10 நிறுவனங்களில் ஒன்றாக சென்னை திகழ்கிறது. 1992-ம் ஆண்டிலிருந்து அன்னீய முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஹுண்டாய் முதல் பி.எம்.டபிள்யூ. வரை பல நிறுவன ஆலைகள் தமிழகத்தில் அமைந்துள்ளன. தமிழகத்தில் ஒரு நிமிடத்திற்கு 3 கார்களும், 75 வினாடிகளுக்கு ஒரு சரக்கு வாகனமும் உற்பத்தியாகிறது. மொத்த வாகன உற்பத்தித் திறனில் 30 சதவீதம் தமிழகத்தில் உள்ளது. வாகன தயாரிப்பில் தமிழகத்தை முதன்மை ஆக்குவதும், 11 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை கொண்டு வருவதும் எனது லட்சியம்' என குறிப்பிட்டார்.