பிரமோஸ் பரிசோதனை
ஒலியைவிட அதிவேகத்தில் செல்லக்கூடிய பிரமோஸ் ஏவுகணை பரிசோதனை, பொக்ரான் சோதனை மையத்தில் மார்ச் 4-ஆம் தேதி வெற்றிகரமாக நடந்தது. பிரமோஸ் சுமார் 290 கிலோமீட்டர் தூரம் வரை பறந்துசென்று இலக்கைத் தாக்கும் வல்லமை வாய்ந்தது. இந்திய ராணுவ துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஸ்ரீகிருஷ்ண சிங், இயக்குநர் ஜெனரல் லெப்ட்டினன்ட் ஜெனரல் ஏ.கே.செளத்ரி உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள் பிரமோஸ் பரிசோதனையை நேரில் பார்வையிட்டனர்.