விரைவில்...குரூப் 1,2,4
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி ஆண்டு விழாவில் டி.என்.பி.எஸ்.சி தலைவர் நட்ராஜ் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், 'காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளில் டி.என்.பி.எஸ்.சி. தீவிரம் காட்டி வருகிறது. முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக நடைபெறும் தேர்வுகளை 9 மாதத்திலும், எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடைபெறும் தேர்வுகளை 6 மாதத்திலும், எழுத்துத் தேர்வுகளை மூன்று மாதத்திலும் நடத்தி முடிக்க காலக்குறீயிடு நிர்ணயித்துள்ளோம். தமிழக அரசில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிப்பு மார்ச் 31-க்குள் வெளியிடப்படும். தேர்வாணையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படையாக இருக்கும். நல்லவர்கள் அரசுத் துறைக்கு அதிகமாக வர வேண்டும். அப்போதுதான் அனைத்துத் துறைகளிலும் நாடு முன்னேறும்' என்று குறிப்பிட்டார்.