து.ராணுவம்- 40000 வேலை
மத்திய துணை ராணுவப் படைகள் என்றழைக்கப்படும் எல்லைப் பாதுகாப்புப் படை, தொழிற் பாதுகாப்புப் படை ஆகியவற்றில் 40ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், மாநிலங்களவையில் தெரிவித்தார். பல்வேறு பணி நிலைகளைக் கொண்ட இந்த காலியிடங்கள் யு.பி.எஸ்.சி, எஸ்.எஸ்.சி மற்றும் துறைத் தேர்வுகள் மூலமாக படிப்படியாக நிரப்பப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.