கார்ப்பரேஷன் வங்கி
பொதுத்துறை வங்கியான கார்ப்பரேஷன் வங்கி புதிதாக ஆயிரம் பேரை வருகிற செப்டம்பரில் பணியமர்த்த உள்ளதாக வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அஜய்குமார் தெரிவித்துள்ளார். தற்போது 1430 கிளைகள், 14000 ஊழியர்களுடன் இயங்கி வரும் கார்ப்பரேஷன் வங்கி ஆண்டுதோறும் 200 புதிய கிளைகளை திறந்து வருகிறது. வருகிற மார்ச்சில் 100 புதிய கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் தேவைகளைக் கருத்தில் கொண்டு கிளர்க், அதிகாரிகள் பணியிடங்களுக்கு ஆயிரம் பேரை புதியதாக சேர்க்க உள்ளது கார்ப்பரேஷன் வங்கி.