ஆசிரியர் தேர்வு தீவிரம்
அரசுப் பள்ளிகளில் பகுதி நேர அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர்கள், ஓவியம், தையல் உள்ளிட்ட கலை ஆசிரியர்கள் என 16,549 பேரை நியமிக்கும் பணி நடந்து வருகிறது. ஜனவரி 15-ஆம் தேதிக்குள் நேர்முகத் தேர்வுகளை முடித்து 27-ஆம் தேதியில் இருந்து பணிகளில் சேரும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.ஆனால் பல்வேறு மாவட்டங்களில் அதிகமானோர் விண்ணப்பித்து இருந்ததால் நேர்முகத் தேர்வுப் பணி இந்த மாதம் இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் முகம்மது அஸ்லம் கூறுகையில், 'சில மாவட்டங்களில், அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதால் நேர்முகத் தேர்வு பணிகள் முடியவில்லை. இந்த மாத இறுதிக்குள் பணிகள் நிறைவு பெற்றதும் பிப்ரவரி முதல் வாரத்தில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பணி நியமன உத்தரவுகள் அனுப்பப்பட்டு விடும்' என்றார்.