நீதிபதி தேர்வுக்கு பயிற்சி
சென்னையில் சைதை சா. துரைசாமியின் மனிதநேயம் அறக்கட்டளை சார்பில் சிவில் நீதிபதிகள் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது. நீதித்துறையில் தற்போது 185 சிவில் நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு தமிழக அரசின் உள்துறையால் நடத்தப்படவுள்ளது. அந்தத் தேர்வை எதிர்கொள்ளவிருக்கும் பி.எல். பட்டதாரிகளுக்கான கட்டணமில்லா பயிற்சியை, மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் நடத்த உள்ளது. இந்தப் பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகத்துக்கு நேரடியாக வந்து பதிவு செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்ய வரும் மாணவர்கள் "பாஸ்போர்ட்' அளவிலான புகைப்படத்தை கொண்டு வர வேண்டும். தொடர்புக்கு: 044-24358373, 9840106162 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.