அமைச்சர் மரணம்
தமிழக அமைச்சர் சி.கருப்பசாமி சென்னை தனியார் மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 56. அதிமுக சார்பில் சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருப்பசாமி, தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலம் அமைச்சராக இருந்தவர். உடல்நிலை காரணமாக இலாகா இல்லாத அமைச்சராக பொறுப்பு வகித்து வந்தார். சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். கருப்பசாமிக்கு சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் ஆகும். இதற்கிடையே கருப்பசாமி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து சங்கரன்கோவில் தொகுதிக்கு வருகிற ஏப்ரல் மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் பிரவீன் குமார் கூறியுள்ளார்.