துருக்கி நிலநடுக்க சோகம்
துருக்கியின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள வான் இலி மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.6 புள்ளிகள் பதிவாகியது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால், எர்ட்ஜிஷ் நகரில் ஆயிரம் கட்டடங்கள், வீடுகள் இடிந்து விழுந்தன. இவற்றில், 40 கட்டடங்களின் இடிபாடுகளில் மக்கள் சிக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. நில நடுக்கத்தில் 270 பேர் பலியாகியிருப்பதாகவும், 1,300 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் துருக்கி உள்துறை அமைச்சர் இத்ரிஸ் நயிம் சகின் அறிவித்துள்ளார். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணி தொடர்ந்து நடக்கிறது.