விக்கிலீக்ஸ் நிறுத்தம்
விக்கிலீக்ஸ் இணைய தளம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட உள்ளது. அமெரிக்க தூதரகங்களுக்கும், அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்துக்கும் இடையே நடந்த ரகசிய தகவல் பரிமாற்றங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது விக்கிலீக்ஸ் இணையதளம். இதனால் அமெரிக்கா உள்பட பல நாடுகள் அதிர்ச்சி அடைந்தன. இந்த நிலையில் விக்கிலீக்ஸ் தலைவர் அசாஞ்சே தனது தளத்தின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘எங்களுக்கு எதிராக அமெரிக்க மற்றும் இங்கிலாந்து வங்கிகள் நிதி கையாளுதலை தடைசெய்துள்ளன. எங்களது கடன் அட்டைகள் பரிமாற்றம் முடக்கப்பட்டுள்ளது. இதனால் எங்களது செயல்பாடுகளைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தற்காலிகமாக எங்களது செயல்பாடுகளை நிறுத்தி வைக்கிறோம். எதிர்கால பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம்’ என்றார்.