அக்டோபர் 24- ஐ.நா.தினம்
ஆண்டுதோறும் அக். 24-ஆம் தேதி ‘ஐக்கிய நாடுகள் தினமாக’ கொண்டாடப்படுகிறது.முதல் உலகப் போரைப் போல மீண்டும் ஒரு பயங்கரம் நடக்கக் கூடாது என அப்போது உலக நாடுகள் நினைத்தன. அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த உலக நாடுகள் அமைப்பு ஒன்றை உருவாக்க முடிவு செய்ய அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. பின்னர் இரண்டாம் உலகப் போர் ஏற்பட்டு உலகில் பேரழிவை ஏற்படுத்தியது.
எனவே இனியும் இன்னொரு போர் உலக நாடுகளிடையே ஏற்பட்டுவிடக் கூடாது. உலகில் அமைதியும் சமநிலையும் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் 1945 ஏப்., 25 மற்றும் ஜூன் 26ல் சான்பிரான்சிஸ்கோ நகரில் உலக நாடுகளின் கூட்டம் நடந்தது. அதன் தொடர்ச்சியாகவே ஐ.நா., சபை 1945 அக்.24ல் தோற்றுவிக்கப்பட்டது. ஐ.நா. சபை முறைப்படி செயல்படத் துவங்கிய அக்.24ஆம் தேதி ஐ.நா., தினமாக அறிவிக்கப்பட்டது. அமைதியை விரும்பும் எந்த நாடும் இதன் உறுப்பினராகச் சேரலாம். ஐ.நா. சபை தொடங்கப்பட்டபோது 51 உறுப்பு நாடுகள் இருந்தன. தற்போது 193 நாடுகளாக உயர்ந்துள்ளன. ஐ.நா.,வின் நிரந்தர உறுப்பு நாடாக அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் ஆகிய 5 நாடுகள் உள்ளன. நிரந்தரமாக இல்லாத நாடுகளில், இந்தியா உள்ளிட்ட 10 நாடுகள் ஒப்பந்த அடிப்படையில் நிரந்தர உறுப்பினராக உள்ளது. ஐ.நா.,வின் அலுவலக மொழிகளாக ஆங்கிலம், சீனம், அரபி, பிரஞ்சு, ரஷ்யன், ஸ்பானிஷ் ஆகிய 6 மொழிகள் உள்ளன.