Thursday, October 27, 2011

கல்வி அலுவலர் பணிகள்

தமிழக அரசின் தொடக்க கல்வித்துறையில் காலியாக உள்ள 34 உதவித் தொடக்க கல்வி அலுவலர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: 
தொடக்க கல்வித்துறையில் 34 உதவித் தொடக்க கல்வி அலுவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்படவுள்ளனர்.
துறைவாரியாக காலியிடங்கள் விவரம்: தமிழ்- 3, ஆங்கிலம்- 4, கணிதம்-3, இயற்பியல்-3, வேதியியல்-6, தாவரவியல்-4, விலங்கியல்-4, வரலாறு-3, புவியியல்- 4, பட்டதாரிகள் நியமிக்கப்படவுள்ளனர்.

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பாடப்பிரிவுகளில் தேர்ச்சி மற்றும் பி.எட் பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: எஸ்சி, எஸ்டி பிரிவினர் 40 வயதுக்குள்ளும். மற்ற பிரிவினர் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
தேர்வு விவரம்:  முதன்மை பாடத்துக்கு 110 மதிப்பெண், கற்பித்தல் முறைக்கு 30 மதிப்பெண், பொது அறிவுக்கு 10 மதிப்பெண் என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் எழுத்துத் தேர்வு நடைபெறும். எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்கள் 45 மதிப்பெண்களும்,  இதர பிரிவு விண்ணப்பதாரர்கள் 60 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவார். ஒரு பதவிக்கு ஒருவர் என்ற விகிதாசாரத்தில் சான்றிதழ்கள் சரிபார்ப்பு செய்யப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள். அப்போது இன சுழற்சி முறையும் கடைபிடிக்கப்படும்.
தேர்வுக் கட்டணம்: ரூ.300. எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.150 செலுத்த வேண்டும்.
தேர்வுக்கான விண்ணப்பம் கிடைக்கும் இடம், நாள்:  நவம்பர் மாதம் 4-ம் தேதி முதல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் ரூ.50 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவம்பர் 19-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP