மருதுபாண்டியர்- அஞ்சலி
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியர்களின் நினைவு மண்டபத்தில், மருது பாண்டியர்களின் 210-வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த மருதுபாண்டியர்கள், 1801-ம் ஆண்டு திருப்பத்தூரில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டனர். அதனை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 24-ம் தேதி அவர்களது நினைவு மண்டபத்தில் அரசு விழா எடுத்து வருகிறது. அந்த வகையில் அக்டோபர் 24-ஆம் தேதி காலை 6.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் ராஜாராமன் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
மேலும் சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் உதயகுமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.