தே.உ.கொள்கைக்கு ஒப்புதல்
தேசிய உற்பத்திக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 2022-ம் ஆண்டில் 10 கோடி அளவுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புதிய தேசிய உற்பத்திக் கொள்கையின் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) இத்துறையின் பங்களிப்பு 25 சதவீதமாக உயரும் என்றும் தெரிகிறது. புதிய கொள்கையின் மூலம் ஒருங்கிணைந்த வளர்ச்சியை எட்டுவது உறுதி என்கிறார் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா. உற்பத்தித் துறையை ஊக்குவிக்கும் நோக்கில் அரசு இத்துறைக்கு கூடுதல் சலுகைகளை அளிக்கும். முக்கியமாக அதிக வேலை வாய்ப்பை அளிக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அரசு அதிக சலுகைகள் அளிக்கப்படும்.