சவூதி இளவரசர் மரணம்
சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் சுல்தான் பின் அப்துல் அஜிஸ் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 78. சவூதி அரேபியாவின் துணைப் பிரதமராகவும் பாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சராகவும் இருந்தவர் அஜீஸ். புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்றிருந்தவர் அங்கு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.