ஐபிஎம் முதல் பெண் சி.இ.ஓ
ஐபிஎம் நிறுவனத்தின் 100 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக, அதன் தலைமை நிர்வாகியாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிறுவனத்தின் விற்பனைப் பிரிவின் மூத்த துணைத் தலைவராக இருந்த விர்ஜீனியா ரொமெட்டி, ஐபிஎம் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக (CEO) நியமிக்கப்பட்டுள்ளார். 54 வயதான ரொமெட்டி, வரும் ஜனவரி 1ம் தேதி இந்தப் பதவியை ஏற்கிறார். தற்போது அமெரிக்காவின் ஜெராக்ஸ், ஹெச்பி ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளாகவும் பெண்கள் பொறுப்பு வகிக்கின்றனர்.
Virginia Rometty, 54, will become the first female chief executive officer in IBM's 100-year history. she will succeed Sam Palmisano in the role effective Jan 1. Palmisano , CEO since 2002, will remain chairman.