INS சக்தி: சண்டைக்கு ரெடி
ஐ.என்.எஸ். சக்தி என்ற பெயரில் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய போர்க்கப்பல் இந்தியக் கப்பற்படையில் சேர்க்கப்பட்டது. இதன் நீளம் 175 மீட்டர், அகலம் 32 மீட்டர். கிழக்கு கடற்படை பிராந்தியத்தில் உள்ள கப்பல்களில், இது இருமடங்கு சக்தி கொண்டதாகும். 15 ஆயிரம் டன் எடையைத் தாங்கும் திறன் கொண்டது.ஏவுகணை எதிர்ப்புக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஐ.என்.எஸ். சக்தி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற கடற்படை தளபதி அட்மிரல் நிர்மல் வர்மா, இன்னும் இரண்டு ஆண்டுகளில், '29 மிக் - 29 கே' ரக போர் விமானங்களும், 16 ஹெலிகாப்டர்களும் இந்திய கப்பற்படையில் படிப்படியாகச் சேர்க்கப்பட உள்ளதாக குறிப்பிட்டார்.