700கோடியை நெருங்கியாச்சு
உலகின் மொத்த மக்கள் தொகை இந்த மாதத்தில் 700 கோடியாகி விடும், 2100ம் ஆண்டிற்குள் ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என, ஐ.நா.,வின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.கடந்த 1804ம் ஆண்டு வரை, உலகின் மொத்த மக்கள் தொகை 100 கோடியாக இருந்தது. 1960களில், 300 கோடியாக அதிகரித்தது. இன்னும் ஒரு நூற்றாண்டில், ஆயிரம் கோடியாக உயர்ந்து விடும்.மக்கள் தொகை அதிகரிப்பு, வளர்ந்து வரும் நாடுகளில் தான் காணப்படுகிறது.
உலகில், மக்கள் தொகை அதிகரிப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள 10 நாடுகளில், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய, மூன்று வளர்ந்த நாடுகள் மட்டும் தான் இடம் பெற்றுள்ளன. பொருளாதார வளர்ச்சி, பிறப்பு விகிதம் அதிகரிப்பு, இறப்பு விகிதம் குறைவு ஆகியவையே மக்கள் தொகை அதிகரிப்புக்கு காரணம் என கூறப்படுகிறது. கருத்தடை வசதிகளை அதிகளவில் மக்கள் உபயோகப்படுத்தும் போது தான் பிறப்பு விகிதம் குறையும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.