பாலஸ்தீனம்: நண்பேன்டா..!
ஐக்கியநாட்டு சபையில் பாலஸ்தீனம் தற்போது பார்வையாளராக உள்ளது. தங்களது நாட்டை முழு உறுப்பினர் நாடாக அங்கீகரிக்ககோரி ஐ.நா., சபையில் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து ஆராய சிறப்பு குழு அமைக்கப்பட்டது.இக்குழு தனது பணியை துவக்கியது. இந்நிலையில் ஐ.நா. வுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி ஹர்பிந்தர் சிங் பூரி, ஐ.நா., சபையில் பாலஸ்தீனம் உறுப்பினர் நாடாக சேர இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தார். கடந்த 1988ம் ஆண்டே, பாலஸ்தீனத்தை அங்கீகரித்த முதல் அரபு அல்லாத நாடு இந்தியா என்றும் அவர் கூறினார்.