வறுமைக்கோடு நிர்ணய குழு
வறுமைக்கோடு வரையறையை நிர்ணயிக்க புதிய குழு அமைக்கப்படும் என்று மத்திய திட்டக் குழு துணைத் தலைவர் மான்டெக் அலுவாலியாவும், மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷும் கூட்டாக அறிவித்துள்ளனர். நகர்புறத்தில் இருப்பவர்களுக்கு ஒரு நாள் வருமானம் ரூ.32; கிராமப்புறத்தில் இருப்பவர்களுக்கு ரூ.25 என்ற வறுமைக் கோட்டு வருமான வரம்பு ரத்து செய்யப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர் இதற்கிடையே, வறுமைக் கோட்டுக்கான வருமான வரம்பு நாள் ஒன்றுக்கு ரூ.32 என்பது திட்டக் குழுவின் கருத்தல்ல என்றும், அது டெண்டுல்கர் கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்ட தகவல் என்றும் அலுவாலியா கூறியுள்ளார். இந்தப் பிரச்னையில் திட்டக் குழு மீது சிலர் களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், அரசு திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளை இந்த வரம்பு பாதிக்காது என்றும் கூறினார்.