7-ம் தேதி குரூப் 2 முடிவுகள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ந்தேதி குரூப்-2 பணிகளுக்கு (1628 இடங்களுக்கு) தேர்வு நடத்தியது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வு கடந்த பிப்ரவரி 2-ந்தேதி முதல் மார்ச் 28-ந்தேதி வரை நடைபெற்றது. இதுவரை அந்த தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இதனால் நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டவர்களில் பலர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த நிலையில் அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் செல்லமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குரூப்-2 தேர்வு முடிவு வருகிற 7-ந்தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.