புக்கர் பரிசு- 2011
இங்கிலாந்து எழுத்தாளர் ஜூலியன் பர்னெஸ் (வயது 65) எழுதிய ‘தி சென்ஸ் ஆப் ஆன் எண்டிங்' என்கிற ஆங்கில நாவலுக்கு 2011-ம் ஆண்டுக்கான புக்கர் பரிசு வழங்கப்பட்டது. ரூ.39 லட்சம் பரிசுத் தொகை கொண்ட புக்கர் பரிசு, சர்வதேச அளவில் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் பெரிய அங்கீகாரங்களில் ஒன்றாகும். இந்த நாவல் குறித்து தேர்வுக்குழுத் தலைவர் ரிமிங்டன் குறிப்பிடுகையில், ‘இது மிகவும் அழகாக எழுதப்பட்ட புத்தகம். 21-ம் நூற்றாண்டின் மனிதாபிமானம் பற்றி இது பேசுகிறது' என்றார். பர்னெஸ் இதற்கு முன்பு 10 நாவல்களையும், 3 சிறுகதைத் தொகுப்புகளையும், 3 ஊடகத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார்.