தீஸ்டா நதிப் பிரச்னை
இந்தியா-வங்கதேசம் இடையிலான தீஸ்டா நதிப்பிரச்னைக்கு சுமூகத் தீர்வு காணப்படவேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டார். வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு அரசுமுறைப் பயணமாக சென்றிருந்த மன்மோகன்சிங், டாக்கா பல்கலைக்கழகத்தில் உரையாற்றியபோது இதைக் குறிப்பிட்டார். தண்ணீர் பகிர்வு என்பது இரு நாடுகளுக்குமான முக்கிய பிரச்னை என்பதை மனதில் கொண்டு அனைவரும் செயல்படுவது அவசியம் என்றும், 1996-ம் ஆண்டு வங்க தேசத்துடன் கங்கை நதிநீர் பகிர்வு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதைப் போல இந்த ஒப்பந்தமும் சுமூகமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மன்மோகன்சிங் கூறினார்.