இலங்கையில் என்.டி.பி.சி
இந்திய அனல் மின் கழகம் (என்.டி.பி.சி) 500 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை இலங்கையின் திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள சம்பூரில் அமைக்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் என்.டி.பி.சி மற்றும் சிலோன் மின் வாரியம் (சி.இ.பி) இடையே கையெழுத்தானது. இதற்கான முதலீடு 70 கோடி அமெரிக்க டாலர்கள். இதில் 70 சதவீதம் வெளிநாட்டு நிதி ஆதாரங்கள் மூலமாக திரட்டப்படும், மீதியுள்ள 30 சதவீதத்தை இரு நிறுவனங்களும் சேர்ந்து முதலீடு செய்யும். இந்த அனல் மின் நிலையம் 2016-ம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும். இந்த திட்டத்திற்காக 20 கோடி அமெரிக்க டாலர்களை சலுகைகளுடன் கூடிய கடனாக இந்தியா வழங்கியுள்ளது.