ஜனார்த்தன ரெட்டி கைது
சுரங்க முறைகேடுகள் தொடர்பாக ஆந்திர மாநிலத்தில் தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஜனார்த்தன ரெட்டிக்கு சொந்தமான ஒபுலாபுரம் சுரங்க நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஸ்ரீனிவாசரெட்டியும் கைது செய்யப்பட்டார். ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஐதராபாத்தில் பதிவாகியுள்ள வழக்கு தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டதாக சிபிஐ டிஐஜி பி.வி. லட்சுமிநாராயணா தெரிவித்தார்.