2160கோடி சாட்டிலைட் நகரம்
சென்னை அருகே ஐந்து கிராமங்களை உள்ளடக்கி ரூ.2,160 கோடி மதிப்பில் 12 ஆயிரம் குடியிருப்புகளுடன் துணைக்கோள் நகரம் (சாட்டிலைட் டவுன்ஷிப்) அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்தார். சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள திருமழிசை அருகே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான 311.05 ஏக்கர் நிலத்தில் இந்த துணைக்கோள் நகரம் அமைக்கப்படும். செம்பரம்பாக்கம், குத்தம்பாக்கம், பர்வதராஜபுரம், நரசிங்கபுரம், வெள்ளவேடு கிராமங்களை உள்ளடக்கிய இந்த துணைக்கோள் நகரம் "திருமழிசை துணைக்கோள் நகரம்'' என அழைக்கப்படும். இந்த நகரத்தில் 12 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினர் எளிதில் வாங்கக் கூடிய விலையில் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.