ஐ.எம்.எப் புதிய தலைவர்
ஐ.எம்.எப் (International Monetary Fund) என்றழைக்கப்படும் சர்வதேச நிதியத்தின் தலைவராக இருந்து வந்த டொமினிக் ஸ்ட்ராஸ்கான் பாலியல் புகாரில் சிக்கியதால் கடந்த மாதம் பதவி விலக நேரிட்டது. இதனையடுத்து ஐ.எம்.எப்.க்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியில் சர்வதேச நிதியத்தின் 24 பேரைக் கொண்ட ஆட்சி மன்றக்குழு ஈடுபட்டது. பிரான்ஸ் நாட்டு பெண் அமைச்சர் கிறிஸ்டின் லகார்ட், மெக்சிகோ மத்திய வங்கி கவர்னர் அகஸ்டின் கர்ஸ்டன்ஸ் ஆகியோர் போட்டியிட்டனர். இவர்களில் ஐ.எம்.எப் தலைவராக கிறிஸ்டின் லகார்ட் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு வயது 55. இவர் 5 ஆண்டுகளுக்கு தலைவர் பதவியை வகிப்பார். சர்வதேச நிதியத்தின் தலைவர் பதவியில் அமரும் முதலாவது பெண்மணி என்ற பெருமையையும் பெற்றுள்ளார் கிறிஸ்டின் லகார்ட். ஐ.எம்.எப் தலைமையகம் வாஷிங்டனில் உள்ளது.