Tuesday, June 28, 2011

புதிய வெளியுறவுச் செயலர்

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ், அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து புதிய வெளியுறவுத்துறைச் செயலாளராக ரஞ்சன் மத்தாய் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது பிரான்ஸ் நாட்டில் இந்தியத் தூதராகப் பணியாற்றி வருகிறார். 1974-ம் ஆண்டு ஐஎப்எஸ் அதிகாரியான ரஞ்சன் மத்தாய், புனே பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பாடத்தில் முதுகலைப் பட்டப்படிப்பு படித்தவர். அதே ஆண்டு இந்திய வெளியுறவுத்துறை பணியில் சேர்ந்தார். வியன்னா, கொழும்பு, வாஷிங்டன், தெஹ்ரான், மற்றும் பிரஸ்ஸல்ஸ் நகரங்களில் உள்ள இந்தியத் தூதரங்களில் பணி செய்துள்ளார். 1995-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டுவரை டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அலுவலகத்தில் இணைச் செயலாளராக பணியாற்றியிருக்கிறார்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP