Tuesday, June 28, 2011

அமைச்சரவை மாற்றம்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பரிந்துரையின் பேரில்தமிழக அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டுள்ளன. பிற்படுத்தப்பட்டோர்-சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. ஏ.முகமது ஜான் நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. மாற்றப்பட்ட அமைச்சர்களின் துறைகள் வருமாறு: (அடைப்புக்குறிக்குள் முன்பு வகித்த துறைகள்):
டி.கே.எம். சின்னையா - சுற்றுச்சூழல் துறை அமைச்சர் (பிற்படுத்தப்பட்டோர் - சிறுபான்மையினர் நலம், கூடுதல் பொறுப்பாக சுற்றுச்சூழல் துறை).
எம்.சி.சம்பத் - சிறப்புத் திட்டங்கள் அமலாக்கம் (கிராமத் தொழில் மற்றும் சிறு தொழில் துறை அமைச்சர்)
எஸ்.பி. வேலுமணி - தொழில், கனிம வளத் துறை அமைச்சர் (சிறப்புத் திட்டங்கள் அமலாக்கம்)
சி.சண்முகவேலு - கிராமத் தொழில் துறை அமைச்சர் (தொழில் துறை அமைச்சர்)
என்.ஆர்.சிவபதி - கால்நடை பராமரிப்பு, பால் வளத் துறை அமைச்சர் (விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்)
சி.கருப்பசாமி - விளையாட்டு, இளைஞர் நலன் துறை அமைச்சர் (கால்நடை பராமரிப்பு).

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP