Wednesday, May 11, 2011

பேரகரமுதலி பணி நிறைவு

தமிழக அரசின் ‘செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி’ உருவாக்கும் திட்டம் நிறைவு பெற்றுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
செம்மொழியாம் தமிழ் மொழியின் தனித் தன்மையையும், தொன்மையையும், மேன்மையையும் புலப்படுத்தும் நோக்கில் ‘செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி’ ஒன்றை உருவாக்கும் திட்டம், 8-5-1974 அன்று தி.மு. கழக அரசு பொறுப்பிலே இருந்த போது மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் அவர்களை இயக்குநராகக் கொண்டு தொடங்கப்பட்டு,
அந்தப் பணியை முனைவர் இரா.மதிவாணன் பின்னர் பொறுப்பேற்றுத் தொடர்ந்து பணியாற்றி, அகர முதலியின் மடலங்களை வரிசையாக அச்சியற்றி வெளியிட்டதோடு, அதன் இறுதி மடலமாகிய 12-ம் ஆண்டு மடலத்தினை திட்டத்தின் 31-வது வெளியீடாக தயாரித்து, முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட அதன் முதல் பிரதியை நிதி அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் பெற்றுக் கொண்டார்கள். 37 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த மாபெரும் பணி இத்துடன் முடிவுறுகிறது. இந்த பன்னிரெண்டாம் மடலம் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித்திட்ட இயக்ககத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை வெளியிடும் போது இதன் மதிப்புறு இயக்குநர் முனைவர் இரா.மதிவாணன் உடன் இருந்தார்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP