தாகூர் விருது
ரவீந்திரநாத் தாகூரின் 150-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தை டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், "சர்வதேச சகோதரத்துவத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், ரவீந்திர நாத் தாகூரின் பெயரில் கவுரவம் மிக்க சர்வதேச விருது ஒன்றை மத்திய அரசு நிறுவ முடிவு செய்துள்ளது. உலக அளவில் சகோதரத்துவம் தழைத்தோங்க பாடுபடுபவருக்கு இவ்விருது வழங்கப்படும்" என்றார். விருதுக்குரியவரை பிரதமர் தலைமையிலான குழு தேர்வு செய்யும்.