மீண்டும் ஜோஷி
பிஜேபி மூத்த தலைவர் ஜோஷி. இவரது தலைமையிலான பொதுக்கணக்குக் குழு (பி.ஏ.சி) தயாரித்த ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணை குறித்த வரைவு அறிக்கை ஏப்ரல் 28-ம் தேதி தாக்கல் செய்யப்படவிருந்தது. ஆனால், பிஏசி-யில் மொத்தமுள்ள 21 உறுப்பினர்களில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக 11 உறுப்பினர்கள் வாக்களித்ததால் இந்த அறிக்கையை வெளியிட முடியாமல் போனது.
இதனால் அறிக்கையை மக்களவைத் தலைவர் மீரா குமார் அலுவலகத்துக்கு முரளி மனோகர் ஜோஷி அனுப்பிவைத்தார். இந்த நிலையில் ஜோஷியின் பதவிக்காலம் முடிந்ததால் அவரையே மீண்டும் தலைவராக நியமிக்க வேண்டும் என பிஜேபி பரிந்துரை செய்திருந்தது. இதை ஏற்று அவரை மீண்டும் அப்பதவியில் நியமிக்க மக்களவைத் தலைவர் மீரா குமார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.