கோத்ரா தீர்ப்பு
கடந்த 2002- ம் ஆண்டு பிப்ரவரி 27-ந் தேதி, அயோத்தி சென்று விட்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கரசேவகர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர். குஜராத் மாநிலம் கோத்ரா ரெயில் நிலையம் அருகே, ரெயிலை மறித்து ஒரு கும்பல் தீவைத்தது. இதில் 59 கரசேவகர்கள் பலியானார்கள். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 94 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் மீதான வழக்கு ஆமதாபாத்தில் உள்ள விரைவு கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில், 31 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி பி.ஆர்.படேல் தீர்ப்பு அளித்தார். மீதி 63 பேரை அவர் விடுதலை செய்தார். இதில் குற்றவாளிகளில் 11 பேருக்கு மரண தண்டனையும், மீதி 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு குறித்து அரசு வக்கீல் ஜே.எம்.பஞ்சால் கூறுகையில், 'ஒரே வழக்கில் 11 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது இந்தியாவில் இதுவே முதல்முறை ஆகும்' என்றார்.