ஐந்து மாநிலத் தேர்தல்
தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், அசாம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநில சட்டப் பேரவைகளின் பதவிக் காலம் அடுத்த இரு மாதங்களில் முடிவடைகிறது. இதனையடுத்து இந்த ஐந்து மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தேதிகளை இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி அறிவித்தார். தமிழகம், புதுவை மற்றும் கேரளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும். அசாமில் 2 கட்டமாக, ஏப்ரல் 4 மற்றும் ஏப்ரல் 11ம் தேதிகளிலும், மேற்கு வங்கத்தில் 6 கட்டங்களில் ஏப்-18, ஏப்-23, ஏப்-27, மே-3, மே-7, மே-10 ஆகிய தேதிகளிலும் நடைபெறும் என்று அறிவித்தார். இந்த ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து வாக்குகள் ஒட்டுமொத்தமாக மே 13ம் தேதி எண்ணப்படும்.