திருநங்கைகள் தினம்
தமிழகத்தில் திருநங்கைகளுக்கான நலவாரியத்தை தமிழக அரசு 2008ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதியன்று அமைத்தது. இதனையொட்டி ஏப்ரல் 15ம் தேதியை 'திருநங்கைகள் தினமாக' தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பினை முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ளார். இது சமூகம், பொது சமூகத்துடன் திருநங்கைகள் இணைய எடுத்து வரும் முயற்சிகளுக்கு பெரும் ஊக்குவிப்பாக அமையும் என 'தாய்' திட்ட இயக்குனர் டாக்டர் லட்சுமிபாய் கூறியுள்ளார்.