நால்கோ தலைவர் கைது
மத்திய அரசுக்குச் சொந்தமான தேசிய அலுமினிய நிறுவனத்தின் (நால்கோ) தலைவர் ஏ.கே. ஸ்ரீவஸ்தவா லஞ்சம் வாங்கியதாக சிபிஐ போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மனைவி சாந்தினி மற்றும் ஸ்ரீவஸ்தவாவின் கூட்டாளிகளான பி.எல். பஜாஜ், அவரது மனைவி அனிதா பஜாஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள ஸ்ரீவஸ்தவா வீட்டில் ரூ. 30 லட்சம் ரொக்கம், 10 கிலோ எடையுள்ள தங்கம் ஆகியவற்றையும் சி.பி.ஐ கைப்பற்றியுள்ளது.