ரங்கசாமி புதுக்கட்சி
புதுவை முன்னாள் முதல்- அமைச்சர் ரங்கசாமி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகினார். இந்த நிலையில் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் என்ற புதிய கட்சியை ரங்கசாமி தொடங்கியுள்ளார். கட்சிக்கு புதிய கொடியும் தயாரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி கொடி வண்ணமுடைய அந்த கொடியின் நடுவே சிவப்பு பவளநிறத்தில் என்.ஆர். என்ற எழுத்து பொறிக்கப்பட்டு அந்த எழுத்தின் மத்தியில் மஞ்சள் நிறத்தில் எலுமிச்சை பழமும் இடம் பெற்று உள்ளது.