இன்னொரு ஸ்பெக்ட்ரம் முறைகேடு
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததில் நாட்டுக்கு ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கணக்கு தணிக்கைக் குழு அறிக்கை தாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில் இஸ்ரோவிலும் ( இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் ) அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரோ அனுப்பும் செயற்கை கோள்களில் இருந்து பெறப்படும் அலைவரிசைகள் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்படுகின்றன. அந்த வகையில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு சொற்ப தொகைக்கு அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், அதில் இஸ்ரோவுக்கு ரூ. 2லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தணிக்கைத்துறை அறிக்கை தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.