காங்கிரசில் சிரஞ்சீவி கட்சி
பிரபல நடிகரும் பிரஜா ராஜ்ஜியம் கட்சியின் தலைவருமான சிரஞ்சீவி தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைப்பதாக அறிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்த பிறகு இதனை தெரிவித்தார். ஆந்திர மாநிலத்தின் நலன் கருதி, பிரஜா ராஜ்ஜியம் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கும் முடிவை எடுத்ததாக சிரஞ்சீவி கூறியுள்ளார்.