வி.ஏ.ஓ - ஹால் டிக்கெட்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பணியிடங்களுக்கான தேர்வினை வருகிற 20ஆம் தேதி நடத்த உள்ளது. இந்தத் தேர்வினை எழுத விண்ணப்பித்தோருக்கான 10 லட்சம் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) அஞ்சலகங்கள் மூலம் நேரடியாக விநியோகிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
‘சென்னையில் கிரீம்ஸ் சாலை அஞ்சலகத்தில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள 93 தலைமை அஞ்சலகங்கள், 20 ஆயிரம் கிளை அஞ்சலகங்கள் மூலம் நகரம் முதல் குக்கிராமங்கள் வரை அடுத்த 3 நாள்களில் இந்த தபால்கள் விநியோகிக்கப்பட்டுவிடும் என்றும் இந்த தேர்வுக்கூடச் சீட்டுகளை விநியோகிப்பதன் மூலம் அஞ்சல் துறைக்கு ரூ. 1 கோடி வருவாய் கிடைத்துள்ளது’ என்றும் சென்னை மத்திய கோட்ட அஞ்சல் துறை முதுநிலை கண்காணிப்பாளர் ஆர். வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.