சீனாவில் பஞ்சம் அபாயம்
சீனாவில் பஞ்சம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இது குறித்து ஐநாவின் உணவு முகமை எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் கோதுமை பயிரிடப்படும் 140 லட்சம் ஹெக்டேர் நிலத்தில், 50 லட்சம் ஹெக்டேர் நிலம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. 25 லட்சம் பொதுமக்களும் 27 லட்சம் மற்ற உயிரினங்களும் குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக ஐநாவின் உணவு முகமை குறிப்பிட்டுள்ளது.
சீனாவின் உணவு தானிய நிலை உலகின் மற்றப் பகுதிகளை விட மிகவும் மோசமானதாக உள்ளதாகவும், தங்களது மக்கள் தொகைக்கு ஏற்ப சீனா உணவு தானியங்களை இறக்குமதி செய்தால் அது சர்வதேச தானிய சந்தையில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கும் என்றும் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை இயக்குநர் ராபர்ட் எஸ். ஜெக்லர் தகவல் வெளியிட்டுள்ளார்.