Tuesday, February 8, 2011

பிரதமர் அலுவலகம் மறுப்பு

இஸ்ரோவின் எஸ்-பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏல நடைமுறையை பின்பற்றாமல் பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதால் அரசுக்கு 2 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. இதனை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. ‘இது குறித்து சிஏஜி அலுவலகமும் விண்வெளித்துறையும் உண்மை நிலையை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளன. எஸ்-பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக எந்த முடிவையும் அரசு எடுக்கவில்லை. எனவே, வருவாய் இழப்பு என்ற கேள்விக்கே இடமில்லை. அத்தகையத் தகவல்கள் முற்றிலும் அடிப்படையற்றவை’ என்று பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP