Thursday, February 17, 2011

சமூகநலப் பணிகள்

தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் வி.கே.சுப்புராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாமக்கல், திருவாரூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் சமூக நலப்பணியாளர் பதவிகளும், மதுரை, தேனி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உளவியலாளர் மற்றும் சமூக நலப் பணியாளர் பதவிகளும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உளவியாளர் பதவிக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தில் சமூக நலப்பணியாளர் பதவிக்கும் விண்ணப்பிக்கலாம்.
இது தாற்காலிகமான பதவியாகும்.உளவியலாளர் எம்.பில்., அல்லது எம்.ஏ. அல்லது எம்.எஸ்ஸி (உளவியல்) இந்தத் துறையில் ஆறுமாத பயிற்சி அனுபவம் மற்றும் சமூக நல ஊழியர் எம்.எஸ்.டபிள்யூ/ எம்.ஏ., சமூக நலப்பணி மனநலம் பயின்றோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வயது வரம்பு இல்லை. சொந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். உளவியலாளர்களுக்கு மாத தொகுப்பூதியமாக ரூ.8 ஆயிரமும், சமூக நல ஊழியர்களுக்கு மாத தொகுப்பூதியமாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் பிப்ரவரி 24-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பெயர், பிறந்த தேதி, கல்வித் தகுதி, சொந்த மாவட்டம் ஆகியவற்றுக்கான சான்றிதழ்களை இணைத்து, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம், (மத்திய மனநலத் திட்டம்), தொகுப்பூதிய பணியிடம், டி.எம்.எஸ். வளாகம், தேனாம்பேட்டை, சென்னை-6 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP