Thursday, February 17, 2011

சென்னையில் முகாம்

மகளிர் திட்டத்தின் மூலம் தொழில் திறன் பயின்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் சென்னையில் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற உள்ளது. சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான இளைஞர்கள் கலந்து கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
2006-2007-ம் ஆண்டு முதல் 2010-2011-ம் ஆண்டு வரை இலவச தொழில் திறன் பயிற்சி பெற்ற இளைஞர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். சென்னையில் இயங்கி வரும் பல்வேறு நிறுவனங்கள் இதில் பங்கேற்க உள்ளன. மகளிர் திட்டத்தின் கீழ் இளைஞர் தொழில் திறன் பயிற்சி பெற்றுள்ள மாணவர்கள் மற்றும் தகுதியான இளைஞர்கள், கல்விச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், தொழில் திறன் பயிற்சி பெற்றதற்கான சான்று, இரண்டு புகைப்படங்கள், சுய முகவரியிட்ட அஞ்சல் உறை, இருப்பிடச் சான்று, ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு சென்னை மகளிர் திட்ட அலுவலகத்தினை 044 - 2811 0616, 94450 34102 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP