புதிய இயக்குநர்
தமிழக அரசின் செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநராக கே.எஸ். பழனிசாமி (வயது 42) நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் தமிழ் வளர்ச்சி, இந்து சமய அறநிலையத் துறை, செய்தித் துறையின் துணைச் செயலாளராகவும் பொறுப்பு வகிப்பார். கே.எஸ்.பழனிசாமி ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். முதுநிலை கால்நடை மருத்துவ அறிவியல் பட்டம் பெற்றவர். 1997-ம் ஆண்டு குரூப்-1 தேர்வில் தேர்வானார். சேலத்தில் டாஸ்மாக் மண்டல மேலாளராகவும், சேலம் மாநகராட்சி ஆணையராகவும் பணியாற்றியிருக்கிறார். 2010-ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.