இந்தியா- ஜப்பான் ஒப்பந்தம்
இந்தியாவுடன் ஜப்பான் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை செய்துள்ளது. இதன் மூலம் இரு நாடுகளிடையிலான வர்த்தகத்தில் நிலவி வந்த தடைகள் நீங்கும். ஒப்பந்தத்தில் மத்திய வர்த்தக, தொழில் அமைச்சர் ஆனந்த் சர்மா, ஜப்பானின் வெளியுறவு அமைச்சர் செஜி மஹேரா ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். ஒப்பந்தத்தின் விளைவாக அடுத்த 10 ஆண்டுகளில் இரு நாடுகளிடையிலான வர்த்தக வரி விதிப்பில் 94 சதவீத அளவுக்கு வரியில்லாததாக இருக்கும். சிங்கப்பூர், தென் கொரியாவுடன் இந்தியா ஏற்கனவே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது.