13.30 அடி வள்ளுவர் சிலை
புதுச்சேரியில் திருவள்ளுவருக்கு 13.30 அடியில் வெண்கல சிலை திறக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் இதனை திறந்து வைத்தார். திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்களை குறிக்கும் வகையில் 13.30 அடி உயரத்தில் இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது 1500 கிலோ எடை கொண்டதாகும். விஜயவாடாவைச் சேர்ந்த சிற்பி சிவவரபிரசாத் இதனை வடிவமைத்துள்ளார்.