என்டோசல்ஃபான் தடை
என்டோசல்ஃபான் பூச்சிமருந்தை பயன்படுத்த கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. கர்நாடகாவில் பெல்தங்கடி, புத்தூர், பந்த்வால் உள்ளிட்ட சில தாலுகாக்களில் முந்திரி தோப்பில் பூச்சியைக் கட்டுப்படுத்த என்டோசல்பான் தெளிக்கப்பட்டது. இதனால் மனிதர்கள், விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு பாதிப்புகள் ஏற்பட்டதாக புகார்கள் எழுந்ததால் இந்த மருந்துக்கு தடைவிதிக்க கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக கர்நாடக உயர்கல்வித் துறை அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.